415 ஆவதாக அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா - புதிதாக பிறந்த சிசு உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் வெள்ளிக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 415 ஆவது நோயாளியான மருதானையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பிறந்த குறித்த குழந்தை கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

புதிதாகப் பிறந்த குழந்தையின் மரணத்திற்கான சரியான காரணம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்நிலையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 415 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இன்றுமட்டும் 47 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 02 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு எமது முகநூலுடன் இணைந்திருங்கள்

No comments: