இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 420 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்து வருகின்ற கொரோனோ வைரஸ் தாக்கத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 100 கொரோனோ நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடந்த 11  நாட்களில் மட்டும் 200 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை சுகாதார துறையினரை மட்டுமல்லாது நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை நேற்று மட்டும் 47 நோயாளர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் மொத்தம் 420 பேர் இன்றுவரை கொரோனா தொற்றில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: