கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் மாநகர சபையால் நிர்வகிக்கப்படும் வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணங்களை அறிவிடும் அதிகாரம் தனி நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ வழங்கப்படவில்லை என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

இதனால், இந்த காலப் பகுதியில் வீதிகளில் இருக்கும் வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்தும் போது கட்டணங்களை செலுத்த வேண்டாம் என மாநகர சபை, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டுமாயின் 077-1093127 என்ற தொலைபேசி இலக்கத்துடன தொடர்புக்கொள்ளுமாறு கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

No comments: