கொரோனா வைரஸ்: அரசாங்கம் முதல் தொடர்புகளை சோதனை செய்ய வேண்டும் - ஜி.எம்.ஓ.ஏ. வலியுறுத்து

நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளிகளுடன் முதல் தொடர்புடையவர்களின் சோதனை முடிக்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியது.

கோவிட் -19 பரவலின் நாடு தழுவிய நிலைமையை மதிப்பீடு செய்யாமல் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான முடிவை எடுக்க முடியாது என அச்சங்கத்தின் உதவி செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

நிலைமையை மதிப்பிடுவதற்கு, அரசாங்கம் குறைந்தபட்சம் முதல் தொடர்புகளின் சோதனையை முடிக்க வேண்டும், பின்னர் இது இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்புகளுக்கு செல்ல வேண்டுமா என தீர்மானிக்க வேண்டும் என கூறினார்.

கடந்த புதன்கிழமை (15) நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போது,தேசிய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு மாகாண மட்டத்தில் நாளாந்த செயற்பாடுகளை ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு கைத்தொழில் நிறுவனங்கள், விவசாய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னர் போன்று முன்னெடுப்பதற்கு தேவையான பணிப்புரைகளை சுகாதார பணிப்பாளரின் ஊடாக உடனடியாக முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் மாகாண மட்டத்தில் கிடைக்கப்பெறும் சுகாதார பரிந்துரைகளை கருத்திற் கொண்டு தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: