நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டின் தற்போதைய அவசகால நிலையில், தன்னால் கூறப்பட்டதாக போலியான பல தகவல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இணையத்தளங்களிலும், தொலைபேசி வாயிலாகவும், ஏனை சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பரப்பப்படுகின்றன என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை தவறான கருத்துக்களை சமூகத்தினரிடையே கொண்டு செல்வதனால் மக்கள் ஏமாற்றம் அல்லது விரக்தி அடைய கூடும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தானது அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் மற்றும் அறிக்கைகள் என்பன உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் பக்கங்கள் வாயிலாக மாத்திரமே பகிரப்படும் என்பனை அறியத்தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: