மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் - மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 188 ஆக உயர்வு

மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 03 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார மேம்பாட்டுப்பணியாகம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்வர்களில் 42 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 140 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அதிதீவிர சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

No comments: