ஏப்ரல் 14 ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள பிரதேசங்கள் இதோ...!

19 மாவட்டங்களில் நாளை (09) காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 04 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸை அடுத்து அதி அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய பகுதிகளும் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

19 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும்.

இதேவேளை ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அதே பகுதிகளுக்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும்.

அத்தியாவசிய சேவை தவிர்ந்த வேறு விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: