மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் - மொத்த எண்ணிக்கை 368 ஆக உயர்வு
இலங்கையில் மேலும் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படை உறுப்பினர்கள் 29 பேரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 368 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 107 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
