இந்தியாவில் ஊரடங்கு சட்டத்தை நீடிக்க தீர்மானம்

இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்களும் முன்வைத்த கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஊரடங்கை நீடிக்க பிரதமர் எடுத்துள்ள தீர்மானம் சரியானது என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவீட் செய்துள்ளார்.

இந்நிலையில், ஊரடங்கை மேலும் நீடிப்பதாக இருந்தால் ஏழைகளுக்கு நிவாரணமளிப்பது தொடர்பில் அரசு தீர்மானிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 7,400 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் இதுவரை 239 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு கடந்த 24 மணித்தியாலங்களில் மற்றும் 40 கொரோனா மரணங்கள் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

No comments: