10000 நெருங்கும் கைதுகள்....! பொலிஸாரின் எச்சரிக்கை...!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டி உட்பட 2332 வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி பயணிப்போருக்கு பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: