உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் - மூவர் காயம்

பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊரடங்கு உத்தரவை மீறி குறித்த நபர்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: