ஏப்ரல் 20 க்குப் பின்னர் வணிக செயற்பாடுகளை மீண்டும் தொடங்குங்கள் - பிரதமர் மஹிந்த

மட்டுப்படுத்த நடவடிக்கைகளுடன் நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 20 க்குப் பின்னர் பாதிக்கப்படாத மாவட்டங்களில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (18) சந்தித்ததாகவும் தானும் அதில்  கலந்துகொண்டதாகவும் அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் பந்துல குணவர்தன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு  தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின்போது சுகாதார அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் கலந்தாலோசித்து தொழிலாளர்கள் தங்கள் உற்பத்தியை மறுதொடக்கம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

எனவே சுகாதார முன்னெச்சரிக்கைகளுக்கு உட்பட்டு பாதிக்கப்படாத மாவட்டங்களில் அவர்கள் வேலையை மறுதொடக்கம் செய்யலாம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்தோடு கொழும்பு, கமபஹா போன்ற அதிக ஆபத்துள்ள மாவட்டங்களில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க நேரம் எடுக்கும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

மேலும் இன்றைய (18) செய்திகளை படிக்க...

No comments: