16 ஆம் திகதி ஊரடங்கு தளர்கின்றது - ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேலும் அறிவிப்புகள் வரும் தொடரும்  ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

முன்னர் அறிவித்ததன் பிரகாரம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு தளராது என்றும் மறு அறிவிப்பு வரும்வரை நீடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: