இங்கிலாந்தில் மேலும் 866 நோயாளிகள் உயிரிழப்பு - மொத்த எண்ணிக்கை 8,114

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளன மேலும் 866 நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தம் 8,114 ஆக இறப்புக்கள் அதிகரித்துள்ளன.

நோயாளிகள் 27 முதல் 100 வயதுக்கு உட்பட்டவர்கள் - அவர்களில் 56 பேருக்கு அடிப்படை சுகாதார நிலை எதுவும் தெரியவில்லை என அந்நாட்டு தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

முன்னதாக, முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், ஸ்கொட்லாந்தில் இறந்த COVID-19 உடைய நோயாளிகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது - மொத்தம் 495 என கூறினார்.

வேல்ஸில், மேலும் 29 இறப்புகள் சம்பவித்தது மொய்த்த எண்ணிக்கை 315 ஆக உயர்ந்தன. இதேவேளை வடக்கு அயர்லாந்தில் இன்று வெள்ளிக்கிழமை 10 பேர் உயிரிழந்ததாகவும் அதாவது அங்கு 92 ஆக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: