"முடங்கியுள்ள சுற்றுலாத் துறையை உயர்த்த வேண்டும்"

கொரோனா வைரஸ் காரணமாக முடங்கியுள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு கடுமையான திட்டம் தொடங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,தொழிற்துறையை உயர்த்த நிதி நிவாரண முறையினை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சுற்றுலாத் துறையில் பணிபுரிபவர்கள் இந்த விடயம் தொடர்பாக முடிவெடுப்பது கடினம் எனவே வீழ்ச்சியடைந்த தொழில்துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் என குறிப்பிட்டார்.

இதேவேளை சுற்றுலாத்துறையின் நலனுக்காக எடுக்கப்பட வேண்டிய பல நடவடிக்கைகளையும் சஜித் பிரேமதாச முன்மொழிந்துள்ளார்.

அந்தவகையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் சேர்த்து, வட்டி தள்ளுபடி, கடன் விலக்கு மற்றும் திருப்பிச் செலுத்துதல் நீட்டிப்புகள் போன்றவை முன்னெடுக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் மூலதனத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் அதிகரிக்கவும் சுற்றுலாத் துறைக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: