வெள்ளிமுதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் - ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவிப்பு இதோ..!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பில் பலர் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஊரடங்கு சட்டத்தில் அரசாங்கம் சில திருத்தங்களை கொண்டுவந்தது

இருப்பினும் தற்போது ஊரடங்கு சட்டம்  வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் அமுலாகுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தில் இருப்பதை  சமூக ஊடகங்களில் ஊடாக அவதானிக்க முடிந்தது. இந்நிலையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பினை தெளிவான முறையில்  மீண்டும் பதிவிடுகின்றோம்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும். ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.

அந்தவகையில் வார இறுதி நாட்களான 25 சனி மற்றும் 26 ஞாயிறு ஆகிய தினங்கள் இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது அனைவருக்கும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. 

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்றவை தொடர்பில் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள், அறிவுறுத்தல்களில் மாற்றங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments