பட்டதாரிகளுக்கும் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு...!

புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட  அனைத்து பட்டதாரிகளுக்கும் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளில் ஒரு குழுவினருக்கு மட்டுமே இந்த கொடுப்பனவு 20,000 ரூபாய் கிடைக்கும் என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் நியமனக் கடிதங்களைப் பெற்று, பிரதேச செயலகங்களுக்கு அறிக்கை அளித்த அனைவருக்கும் முறையாக 20,000 வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

No comments: