புதிய திகதியை அறிவியுங்கள் - ஜனாதிபதி

தேர்தலை நடத்துவது மற்றும் நாடாளுமன்றத்தினை கூட்டுவது குறித்து உச்ச நீதிமன்றின் ஆலோசனை அவசியம் இல்லை என்றும் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான திகதியை அறிவிக்குமாறும் ஜனாதிபதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளார்.

பொது தேர்தலை நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடிதம் எழுதியிருந்த நிலையில் அதற்கு பதிலை ஜனாதிபதி, தனது செயலாளர் மூலம் அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள ஆலோசனைக்கு அமைய தேர்தலை அடுத்த மாதம் 25 ஆம் திகதிக்குள் நடத்த முடியாது என இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட முடியாது என தெரிவித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர் வாக்கெடுப்பு நடைபெறும் திகதி குறித்து முடிவெடுப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைக்குள் தலையிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரும்பவில்லை என்றும் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய 15 நாளில் ஆவது நடத்த முடியும் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: