முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் பிரதமர் மஹிந்த அழைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை அலரி மாளிகைக்கு வருகை தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்கே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  225 பேருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தினை உடன் கூட்டுமாறு எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை இதுகுறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments: