COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு கடன் வரம்பை அதிகரிக்க வேண்டும் - மங்கள வலியுறுத்து

நாடளுமன்றத்தில் விரைவாக கடன்பெறும் எல்லை தொடர்பான யோசனையை சமர்ப்பிக்குமாறு முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், தற்போதைய நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு விரைவாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதிவரை அரசாங்கம் இலங்கையில் உள்ள அபிவிருத்தி பிணையங்கள் மூலம் 650 பில்லியன் டொலர்களை பெற்றிருப்பதுடன் அதனை சீன வங்கியிடம் இருந்து கடனாகவும் திறைசேரியில் முறிகள் மூலமாகவும் பெற்றுக்கொண்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.

மேலும் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் மத்திய வங்கி மூலம் கடன்பெறப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், இவை அனைத்தின் மூலம் இலங்கையின் கடன் அளவு உயரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம்  நாடாளுமனறத்தில் முன்வைத்த யோசனையில் குறித்த காலகட்டத்தில் குறிப்பாக ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை கடன்பெறும் எல்லையாக 721 பில்லியன் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த கடன் எல்லையை நெருங்கும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முகம் கொடுக்க போதியளவு நிதியை திரட்ட அரசாங்கத்தினால் முடியாமல் போகும் என்றும் எனவே நாடாளுமன்றை கூட்டு விரைவாக கடன்பெறும் எல்லை தொடர்பான யோசனையை சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Post a Comment

0 Comments