மாவட்ட ரீதியான கொரோனா நோயாளிகளின் விபரம் இதோ

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 189 பேரில் மாவட்ட ரீதியான விபரம் சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் கொழும்பில் 44 பேர், புத்தளம் -34, களுத்துறை - 26, கம்பஹா -16, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா 7 பேரும், இரத்தினபுரியில் - 5, குருநாகலில் - 3, மாத்தறை - 2, காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் தலா ஒருவரும் கண்காணிப்பு மையத்தில் 37 பேரும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர்.

இவர்களில் இன்று மூன்று பேர் குணமடைந்ததுடன் இதுவரை 47 பேர் பூரண சுகம் பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு இதுவரை இலங்கையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 135 பேர் நோய் தொற்று உறுதியாகிய நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இன்றும் அதிகரிப்பு.. 190 ஆனது...!

No comments: