கைதினை தடுக்க கோரி ரிசாட் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

சி.ஐ.டி.யினால் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர். குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரச பேருந்துகளை பயன்படுத்தி புத்தளம் பகுதி வாக்காளர்களை ஏற்றிச் சென்றமை தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகளுக்கு அமைய தம்மை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினர் தயாராகி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்ரிஷாட் பதியுதீன் தனது அடிப்படை உரிமைகள் மனுவினூடாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் குறிறப்புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டு தம்மை கைது செய்ய தயாராகி வருவதாகவும் முன்னாள் அமைச்சர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதன்மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் ஆகவே வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றத்தை கேட்டுள்ளார்.

No comments: