நாட்டில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் - மொத்த எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,117 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 28 பேரும் குவைத்தில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

அவர்களில் 23 பேர் மின்னேரியா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள் என்றும் 05 பேர் திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments: