Sunday, May 24, 2020

இளைஞரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் இன்று (24) பகல் நடைபெற்ற திடீர் விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக் கொண்டிருக்கையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் டன்பார் பகுதியைச் சேர்ந்த திருமணமான 30 வயதுடைய புத்திக பிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

மேலும் இவ்விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.