Wednesday, May 13, 2020

ஒரேநாளில் 20 பேருக்கு கொரோனாத் தொற்று - அவர்களின் விபரம் இதோ!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 20 பேரில், 17 பேர் கடற்படை வீரர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் அதில் 2 பேர் கடற்படை வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும், மேலும் ஒருவர் டுபாயிலிருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 514 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும் 117 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.