வெள்ளைவான் விவகாரம் - ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து: நீதிமன்றம் அதிரடி

வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதும் உடல்நல குறைவு காரணமாக தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ராஜித சேனாரத்னவிற்கு பிணை வழங்குவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும், பிணை வழங்கிய நீதவான் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து சட்டமா அதிபர் கடந்த ஜனவரி 08 ஆம் திகதி று திருத்த விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் குறித்த திருத்த விண்ணப்பம் இன்று (13) மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments