நாட்டில் கொரோனா மேலும் 05 பேருக்கு கொரோனா - மொத்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான  மேலும் 05 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1060 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 04 பேர் கடற்படையினர் என்றும் அதில் இருவரு முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 620 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 428 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்றும் 110 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments