ஊரடங்கு சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் ஜீன் முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் ஜீன் 3 ஆம் திகதிவரை முன்னர் இருந்ததைப்போல இரவு 10 மணிமுதல் காலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

அத்தோடு ஜீன் 4 முதல் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நாடு முழுவதும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும் என்பதுடன் மீண்டும் சனிக்கிழமை வழமைபோன்று 10 மணிமுதல் 4 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.

இதேவேளை கொழும்பு மற்றும் கமபஹா மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: