கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் மேலும் ஒரு நோயாளிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 916 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரேனா தொற்றுக்குள்ளான மேலும் 63 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர் அதன்படி நாட்டில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 462 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றினால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments: