Tuesday, May 26, 2020

அமைச்சர் தொண்டமானின் மறைவு பேரிழப்பு – பிரதமர்

இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்து கேள்விப்பட்டவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வைத்திய சாலைக்கு விரைந்துள்ளார்.

 அங்கு கருத்து தெரிவித்த பிரதமர், “ஆறுமுகம் தொண்டமானின் மறைவு அரசுக்கும் மக்களுக்கும், குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பு” என்று கூறியுளளார்.

 இதேவேளை அமைச்சரின் பூதவுடல் தற்போது ஜயரத்ன மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இறுதிக்கிரியை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.