ஊரடங்கு உத்தரவு தொடர்பான புதிய அறிவிப்பு - இடர் வலையங்களில் ஊரடங்கு தொடரும்

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய இடர் வலையங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு மே 11 திகதி வரை தொடரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை பிற பகுதிகளுக்கான ஊரடங்கு உத்தரவு 4 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாளில் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மே 6 வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் மே மாதம் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 11 ஆம் திகதி காலை 5 மணி வரையில் தொடர்ந்து நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளாந்த மக்கள் வாழ்க்கை இ நிறுவன செயற்பாடுகள் வழமை நிலைக்கு முன்னெடுக்கும் பணி மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு, கம்பஹா , களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் பொழுது மக்களின் வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை வழமை நிலமைக்கு முன்னெடுக்கும் பணி மே மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகயிருப்பதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: