மக்களுக்கான கொடுப்பனவை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கூறவில்லை - மஹிந்த தேசப்பிரிய

கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து மக்களிற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவினை நிறுத்துமாறு தான் ஒருபோதும் வேண்டுகோள் விடுக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டிற்கு அமைய ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.
.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள மஹிந்த தேசப்பிரிய, குறித்த 5000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பான குற்றச்சாட்டுகள் அரசியல்தன்மை கொண்டவையாக காணப்பட்டதால் குறிப்பிட்ட திட்டத்தினை அரசியல் கட்சியோ வேட்பாளரோ தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு அனுமதிக்கவேண்டாம் என்றே குறிப்பிட்ட அதிகாரிகளிற்கு உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.

No comments: