ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று இரவு (03) 10 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச்சட்டம் இல்லை)

இதற்கிணங்க, நாளை (04) மற்றும் நாளை மறுதினங்களில் (05) ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு மதிப்பளித்து ஊரடங்கு சட்டத்தை பின்பற்ற வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 இதேவேளை, நாளை வியாழக்கிழமை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments