இணுவில் பகுதியில் வாள்வெட்டு: படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில், நங்கு பேர் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம், இணுவில்- காரைக்கால் பகுதியில் இளைஞர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த  சற்குணம் பவிலன் என்ற 29 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாகவே, குறித்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் இளைஞர் ஒருவர் தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments