போராட்டத்தின்போது பொலிஸார் தூக்கி வீசிய யுவதி வைத்தியசாலையில் அனுமதி

அமெரிக்காவில் உயிரிழந்த ஜோர்ஜ் புளொய்டின் கொலை மற்றும் கறுப்பினத்தவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக  முன்னிலை சோசலிசக் கட்சியினர் கொழும்பில் முன்னெடுக்கவிருந்த போராட்டத்தில் பொலிஸாரினால் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படும் யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதுகு வலி காரணமாக அவர் இன்று (10) காலி - கராப்பிட்டிய  போதனா அவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையின் போது இந்த யுவதியின் கைகள், கால்களை பொலிஸார் பிடித்து பொலிஸ் வாகனத்துக்குள் தூக்கி வீசப்பட்ட காணொளிகள் சமூக விளைதளங்களில் வெளியாகின.

இந்நிலையில் குறித்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட முதுகு வலியால் அவர் காலி போதனா அவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments: