ஆவா குழு தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் - போலீசாரின் சுற்றிவளைப்பில் 26 இளைஞர்கள் யாழில் கைது

ஆவாகுழு தலைவரின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று (15) மாலை, ஆவா குழு தலைவர் என கூறப்படும் சன்னாவின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று, கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: