கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1900 ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,901 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (15) மாலை 5:30 மணி நிலவரப்படி மொத்தம் 12புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு அந்தவகையில் அடையாளம் காணப்பட்ட புதிய நோயாளிகள் 12 பேரில் 06 பேர் மாலைதீவில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என்றும் ஒருவர் பங்களாதேஷில் இருந்து நாடுதிரும்பியவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 05 பேர் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தொற்று உறுதியானவர்களில் 548 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர் என்றும் 1342 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

No comments: