வில்பத்து காடழிப்பு வழக்கின் தீர்ப்பிற்கான திகதி அறிவிப்பு

வில்பத்து காடழிப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஜூலை 31ம் திகதி அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று (24) அழைக்கப்பட்ட போது ஜனக் டி சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாமினால் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments