நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் தகவல் இதோ

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் நேற்று (09) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1,859 அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு  காணப்பட்டன ஒருவரில் ஒருவர் கட்டாரில் இருந்து நாடுதிரும் பி தனிமைப்படுத்தப்பட்டவர் என்றும் மற்றுமொருவர் கடற்படையைச் சேர்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1057 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 791 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர் 74 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments: