கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 05 பேர் இன்று (06) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,806 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 891 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 904 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்ற நிலையில் 46  பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments