இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன

பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன என்று சுகாதார அமைச்சர் மாட் ஹான்கொக் தெரிவித்தார்.

"போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் வாதத்தை நான் மிகவும் வலுவாக ஆதரிக்கிறேன், ஆனால் வைரஸ் பாகுபாடு காட்டாது மற்றும் பெரிய குழுக்கள் கூடுவது வைரஸ் பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது" என கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மினொசெட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரத்தில் பொலிஸாரினால் விசாரணைகளுக்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஆபிரிக்க அமெரிக்கர் ஜோர்ஜ் பிலோய்ட், பொலிஸாரின் அத்துமீறலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

இதனை அடுத்து நேற்று (06) கொரோனா வைரஸால் ஏற்படும் ஆபத்தை குறைக்க பெரிய கூட்டங்களைத் தவிர்ப்பதற்கான அரசாங்க ஆலோசனையை மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று (07) ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதனால் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுத்தியிருக்கிறதா என ஸ்கைநியூஸ்க்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மாட் ஹான்காக் இவ்வாறு கூறினார்.

No comments: