ஆர்ஜென்டினாவில் ஒரேநாளில் 1000 ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று

ஆர்ஜென்டினாவில் புதிய நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் முதல் முறையாக நாள் ஒன்றுக்கு 1,000 க்கு மேல் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நாட்டு சுகாதார அமைச்சின் தகவலின்படி, 1,141 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்த எண்ணிக்கை 24,761 ஆகவும், 24 புதிய இறப்புகளுடன் உயிரிழப்புக்கள் மொத்த எண்ணிக்கை 717 ஆகவும் காணப்படுகின்றன.

ஆனால் கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும், அவை அண்டை நாடான சிலி அல்லது பிரேசிலைக் காட்டிலும் மிகக் குறைவாகவே உள்ளன.

இந்நிலையில் பல எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும், ஆர்ஜென்டினாவில் தொடர்ந்தும் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: