யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பிற்கான முதலாவது சேவை இன்று காலை 5.45 மணிக்கும் இரண்டாவது சேவை 9.45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டதாக யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரயில் நிலையத்திக்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சலின் அளவு பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர், தனது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
இன்று முதல் காங்கேசந்துறை- கொழும்பு
சேவையில் ஈடுபடவிருக்கும் புகையிரதங்கள்
*03.35 AM ரஜரட்ட ரெஜின(வவுனியாவிலிருந்து)
* 5.30 AM உத்தரதேவி (கடுகதி)
* 09.30 AM யாழ்தேவி
*18.45 PM இரவு தபால் புகையிரதம்
கொழும்பு - காங்கேசந்துறை
சேவையில் ஈடுபடவிருக்கும் புகையிரதங்கள்
* 06.35 AM யாழ்தேவி
*08.50 AM மந்தகதி
*11.50 AM உத்தரதேவி (கடுகதி)
*13.15 PM ரஜரட்ட ரெஜின(வவுனியா வரை)
*15.55 PM ஸ்ரீதேவி (கடுகதி)
*21.00 PM இரவு தபால் புகையிரதம்
0 Comments