பொதுத்தேர்தல் திகதி குறித்து 8 ஆம் திகதி அறிவிப்பு - மஹிந்த தேசப்பிரிய

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளனர்.

இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக சுகாதார வழிகாட்டுதல்களைப் பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை வேட்பாளர்களுக்கான விருப்ப எண் வழங்குவது குறித்தும் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்கெண்ணும் நிலையங்களிலும் சுகாதார அதிகாரிகளைக் கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, சுகாதார அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னதாக அந்தந்த மாவட்ட செயலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சுகாதார உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

No comments: