பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய ஒம்புட்ஸ்மேன் அலுவலகம்...!

மக்களின் முறைப்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய்வதற்கும் விரைவாக தீர்வுகளை வழங்குவதற்கும் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் ஜனாதிபதி செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு ஓய்வு பெற்ற மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ். எம். விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்  என ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகாரிகளின் அலட்சியம் அல்லது அவர்களின் நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது அவற்றின் எல்லைக்கு அப்பால் செயல்படுவதன் விளைவாக பொதுமக்களுக்கு ஏற்படும் ஏதேனும் அசௌகரியதிற்கு தீர்வு வழங்கும் முகமாக ஒம்பூட்ஸ்மேன் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகம் 3 வது மாடி, Old Standard Chartered Bank கட்டிடம், ஜனதிபதி மாவத்தை, கொழும்பு 1 இல் அமைந்துள்ளது.

எனவே பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை அல்லது குறைகளை அலுவலகத்திற்குச் சென்று நேரில் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது அல்லது “ஒம்புட்ஸ்மேன், ஜனாதிபதி செயலகம், கொழும்பு 1” என்ற முகவரிக்கு அல்லது 011 2338073 அல்லது ombudsman@presidentsoffice.lk க்கு ஒரு மின்னஞ்சல் மூடலமும் தொடர்புகொள்ள முடியும்.

No comments: