கொரோனா வைரஸ் - பிரித்தானியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் புதிதாக 286 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 1,741 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கையும் 289,140 ஆக உயர்ந்துள்ளது.

No comments: