கொரோனா தொற்றில் இருந்து மேலும் 900 ற்கும் மேற்பட்டவர்கள் குணமடைவு


நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இன்று (29) மேலும் 963 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 61 ஆயிரத்து 586 ஆக காணப்படுகின்றது.

இதில் 5 ஆயிரத்து 891 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 688 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 297 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: