இலங்கையில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியினை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்கவுடனான கலந்துரையாடலின் பின்னரே இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டிற்கு மேலும் 9 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் கீழ் கோவக்ஸ் தடுப்பூசியினை கொள்வனவு செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments