ரஷ்யா எதிர்க்கட்சி தலைவரின் ஆதரவாளர்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டத்தில் பலர் கைது


ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இற்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டங்களில் பங்கேற்ற சுமார் ஆயிரத்து 400 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய  ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி விமான நிலையத்திலே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், அலெக்ஸி நவல்னியை விடுதலை செய்யுமாறு கோரி அவரது ஆதரவாளர்களினால் தலைநகரில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னியின் கோரிக்கைக்கு அமைவாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 400 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என அந்த நாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: