இலங்கை மீதான பிரேரணையை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவிப்பு


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் இலங்கை மீதான பிரேரணையை ஆதரிப்பதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மனித உரிமைகள் பேரவை அந்த தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற்ற வேண்டுமென்றும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற மனித உரிமைப் பேரவையின் 46 வது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையில் கடந்த கால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாதமையை சுட்டிக்காட்டிய அண்டனி பிளிங்கன், மீண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் இணைந்துகொள்ள அமெரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2018 ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: